இந்திய அஞ்சல் துறை சார்பாக பள்ளி மாணவ,மாணவிகள் மத்தியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தபால்தலை சேகரிப்பு பழக்கம் மற்றும் அதுபற்றிய ஆராய்ச்சியை ஒரு பொழுதுபோக்காக கொள்வதை ஊக்குவிப்பதற்கான உதவித்தொகை வழங்கும் ஸ்பார்ஷ் திட்டத்தின் கீழ் அஞ்சல் சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல்கட்டமாக வினாடி-வினா எழுத்து தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 29-ந் தேதி கடைசிநாளாகும்.
இந்த உதவித்தொகையை பெறவிரும்பும் மாணவர்கள், இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிப்பவராக இருப்பதோடு, அந்தப் பள்ளியில் தபால்தலை சேகரிக்கும் மன்றம் இயங்குவதும், அந்த மன்றத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் உறுப்பினராக இருப்பதும் அவசியம். தபால்தலை சேகரிப்பு மன்றம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவராக இருந்தால், அவர், சொந்தமாக தபால்தலை சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும், தபால்தலை சேகரிப்பு முன்னோடியாக அறிவிக்கப்பட்டு பள்ளி அளவிலான தபால்தலை சேகரிப்பு மன்றத்தை உருவாக்க உதவி செய்யப்படுவதுடன், இளம் மற்றும் தபால்தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள், அதனை எவ்வாறு ஒரு பொழுதுபோக்காக தொடர வேண்டும் என்பது குறித்தும், தபால்தலை சேகரிப்பு தொடர்பான திட்டங்களில் ஈடுபடவும் உதவிகரமாக இருக்கும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு dotirupur.tn@indipost.gov.in என்ற முகவரியிலும், 0421 2239785 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்தகட்டமாக வெற்றி பெற்றவர்கள் தபால் தலை தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் philately project சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு 6,000 ரூபாய் அவர்களின் அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தொகை அவர்களின் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.
இந்த அறிவிப்பை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirupur