ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் மாநகராட்சி வரிகளை செலுத்த நாளை சிறப்பு முகாம்

திருப்பூரில் மாநகராட்சி வரிகளை செலுத்த நாளை சிறப்பு முகாம்

திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி

Tiruppur District | திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த நாளை (நவம்பர் 17) சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் நாளை (வியாழக்கிழமை) வரிகளை செலுத்துவது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. 4 மண்டலங்களிலும் கீழ்கண்டவாறு சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையங்களில் கட்டணம் செலுத்தப்படுகிறது.

நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

மேலும், எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். இணையதள முகவரி https://tnurbanepay.tn.gov.in/ இவற்றில் சொத்துவரி இனத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.92.16 கோடியும், காலியிட வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.7.82 கோடியும், தொழில் வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.18.44 கோடி வரி நிலுவையில் உள்ளது.

Must Read : செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், சுகப்பிரசவத்திற்காகவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவில்!

இதேபோல, குத்தகை இனத்தில் 2022-23ம் ஆண்டுக்குநிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.8 கோடியும் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், 17.11.2022 (நாளை) அனைத்து மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Property tax, Tiruppur