ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க சிறப்பு முகாம் - மிஸ் பண்ணாதீங்க

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க சிறப்பு முகாம் - மிஸ் பண்ணாதீங்க

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல்

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி-ஞாயிறு) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

    திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை (சனிக்கிழமை), மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

    இந்த முகாமில் வருகிற ஜனவரி மாதம் 1ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்கள் மற்றும் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி, ஜூலை மாதம் 1ஆம் தேதி தேதி, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    அந்த படிவங்களை பெற்று ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    Must Read : தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

    அதன்படி, பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Published by:Suresh V
    First published:

    Tags: Local News, Tiruppur, Voters ID, Voters list