ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் கல்விக் கடனுக்கான சிறப்பு முகாம் - கல்லூரி மாணவர்களே மிஸ்பண்ணாதீங்க

திருப்பூரில் கல்விக் கடனுக்கான சிறப்பு முகாம் - கல்லூரி மாணவர்களே மிஸ்பண்ணாதீங்க

கல்விக்கடன்

கல்விக்கடன்

Education Loan | திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க, சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 9, 10ஆம் தேதிகளில், 2 நாட்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அதன்படி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் அறை எண் - 20ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தின் முன்னோடி வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் அன்றே கடன் அனுமதிக் கடிதம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Must Read :விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

இந்த முகாம் நடக்கும்போது விண்ணப்பத்தின் நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் புகைப்படம் இரண்டு, வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்றிதழ் நகல், சாதிச்சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், கல்விக்கட்டண விவரம், 10ஆம் வகுப்பு, பிளஸ்-2, இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கை ஆணை போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

2ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால் முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Educational Loan, Local News, Tiruppur