Home /tiruppur /

புரட்டாசி சனிக்கிழமை - திருப்பூரில் பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

புரட்டாசி சனிக்கிழமை - திருப்பூரில் பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

திருப்பூர்

திருப்பூர்

Special buses to Perumal Temples in Tirupur | புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்காக திருப்பூர் அவிநாசிபாளையம் ராமசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
புண்ணியம் மிகுந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் பக்தர்கள் விரதம், வழிபாடு, பண்டிகை என கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதன்படி, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள்  “கோவிந்தா... கோவிந்தா...” என கோஷமிட்டு பெருமாளை வழிபடுவர்.

இதையும் படிங்க  ; திருப்பூர் மாவட்ட வணிகர்களுக்கு குட்நியூஸ் : ரூ.21,630 கோடி கடன் வழங்க இலக்கு

இந்நிலையில், திருப்பூரில் இருந்து மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், அவிநாசிபாளையம் ராமசாமி கோவில், உடுமலை பாலாஜி கோவில், காரமடை ரங்கநாதர் கோவில் தென்திருப்பதி, கோவில் உட்பட பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க : திருப்பூர் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய காலநீட்டிப்பு - விற்பனை பதிவுக்கு முந்துங்கள்!

அதன்படி, திருப்பூர் அருகே உள்ள அவிநாசிபாளையம் ராமசாமி கோவில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்த பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இங்கே திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வர்.

எனவே, பக்தர்களின் வசதிக்காக அவிநாசிபாளையம் - பொங்கலுார் சாலையில், தற்காலிக பஸ் ஸ்டாப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கே நாளை(புரட்டாசி முதல் சனிக்கிழமை) காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் வழி பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், காங்கயம், பல்லடம், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருப்பூர் மற்றும் அவிநாசியில் இருந்து தாளக்கரை லட்சுமிநரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி