Union
Budget 2023

Highlights

ஹோம் /திருப்பூர் /

ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை... திருப்பூர் மாணவர்களே இதை செய்யுங்கள்..!

ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை... திருப்பூர் மாணவர்களே இதை செய்யுங்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruppur District News : தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி வழங்கப்படுகிறது. இதை பெற மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று திருப்பூர் கலெக்டர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி வழங்கப்படுகிறது. இதை பெற மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று திருப்பூர் கலெக்டர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளதாவது; தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : பயணிகள் கவனத்திற்கு... திருப்பூர் வழியாக செல்லும் இந்த ரயில்கள் எல்லாம் ரத்து

கல்வி உதவித்தொகைக்கு நடப்பு கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruppur