Home /tiruppur /

அரசு விடுதியில் தங்கிப் படிக்க ஆதி திராவிட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

அரசு விடுதியில் தங்கிப் படிக்க ஆதி திராவிட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளின் விடுதியில் தங்கி பயில விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது.

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி கல்லூரிகளின் விடுதியில் தங்கி பயில விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் நடப்பு கல்வி ஆண்டில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பள்ளி விடுதிக்கு வருகிற 20-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிக்கு வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் https://tnadw.hms.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பள்ளி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு வருகிற 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்களும், கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி அன்றும் தேர்வு செய்யப்படும்.

இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய், தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசால் இணையத்தின் மூலம் வழங்கப்படும் NSP எண் மற்றும் இதர வகுப்பின மாணவர்களுக்கு மாநில கல்வி உதவிதொகை பெறுவதற்கான இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் வேண்டும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கான EMIS எண் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மத்திய, மாநில அரசால் கல்வி உதவி தொகை பெறுவதற்காக இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் வேண்டும்.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணைய வழியில் https://tnadw.hms.in விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி