ஹோம் /திருப்பூர் /

மானியத்துடன் ரூ.50 லட்சம் கடனுதவி - திருப்பூரில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

மானியத்துடன் ரூ.50 லட்சம் கடனுதவி - திருப்பூரில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

மானியத்துடன் கடனுதவி

மானியத்துடன் கடனுதவி

Tiruppur District News | திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம, நகர்ப்புறத்தில் புதிய தொழில்கள் தொடங்க பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் மூலம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் புதிய தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் அதிகபட்ச திட்ட மதிப்பீடாக உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சமும், சேவைத்துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும். பொதுப்பிரிவினரில் (ஆண்கள்) நகர்ப்புறத்தில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதமும், கிராமப்புற திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

10 சதவீதம் சொந்த முதலீடாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நகர்ப்புறத்தில் 25 சதவீதமும், கிராமப்புறத்தில் 35 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பில் 5 சதவீதம் சொந்த முதலீடாக இருக்க வேண்டும்.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் தொடர்புடைய தொழில்கள், டிஜிட்டல் பிரிண்டிங் மற்றும் தொடர்புடைய தொழில்கள், கழிவு ஆடைகளில் இருந்து பருத்தி உற்பத்தி மற்றும் தொடர்புடைய தொழில்கள், சாம்பல் கல் உற்பத்தி, பேவர் பிளாக் சிமெண்ட் கல், இண்டர்லாக்கிங் பிரிக்ஸ், தென்னை நார் கயிறு சம்பந்தப்பட்ட தொழில்கள், யார்ன் டப்லிங், எண்ணெய் மில், மாவு மில், யு.பி.வி.சி. கதவு மற்றும் ஜன்னல் தயாரித்தல், அழகு கலைநிலையம், வீடியோ, போட்டோ தொழில், சலூன் கடை போன்ற தொழில்களுக்கும், மேலும் கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, தேங்காய் களம், மீன் பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற அனைத்து தொழில்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், திருப்பூர் என்ற முகவரிக்கும், 0421 2475007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, சாதிச்சான்றிதழ், கல்வி தகுதிச்சான்று, ஜி.எஸ்.டி.யுடன் கூடிய விலைப்பட்டியல், திட்ட அறிக்கையுடன் www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Business, Loan, Local News, Tiruppur