ஹோம் /திருப்பூர் /

சாலையோர வியாபாரிகளின் ஏக்கத்தை போக்குமா புதிய பேருந்து நிலையம்?

சாலையோர வியாபாரிகளின் ஏக்கத்தை போக்குமா புதிய பேருந்து நிலையம்?

திருப்பூர்

திருப்பூர்

Tiruppur Bus Stand : திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் பேருந்து நிலையத்தின் உள்ளேயே கடைகளை வைக்க ஏற்பாடுகள் செய்து தரும்படி சாலையோர வியாபாரிகள் திருப்பூர் மாநகராட்சிக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பழைய பஸ் நிலையம், புது பஸ் நிலையம், மார்க்கெட் வளாகம், நொய்யல் கரை என மேம்பாடு பணிகள் நடைபெறுகிறது.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் நகரின் முக்கிய இடமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை திருப்பூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வாரமாக திருப்பூரில் மழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் பள்ளங்களாகி சேரும் சகதியுமாக காணப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அது மட்டுமின்றி மழைக்காலங்களில் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றது. பேருந்து நிலையத்திற்கு உள்ளே உள்ள கடைகள் அனைத்தும் தற்பொழுது சாலையோர கடைகளாக மாறிவிட்டன.

சாலையோர வியாபாரிகள்

மேலும், பழைய அரசு மருத்துவமனை இருந்த இடமும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்பொழுது திருப்பூர் பேருந்து நிலைய சாலைகள் முழுவதும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சாலையோர வியாபாரிகள்

சாலை ஓரத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு இது பாதுகாப்பு இல்லாத அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது. சரியான இடம் இல்லாததாலும் மழைக்காலங்களில் ஒதுங்க கூட முடியாத சூழல் உள்ளதாகவும் போக்குவரத்து நெரிசலால் வியாபாரமும் சரியில்லாததாகவும் சாலையோர வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதிய பேருந்து நிலையம்

கட்டுமான பணிகள் தற்பொழுது 85% முடிவடைந்த நிலையில் பேருந்து நிலையம் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. கட்டுமான பணிகள் முடிந்தவுடன் சாலையோர வியாபாரிகளுக்கு பேருந்து நிலையத்தின் உள்ளேயே கடைகளை வைக்க ஏற்பாடுகள் செய்து தரும்படி சாலையோர வியாபாரிகள் திருப்பூர் மாநகராட்சிக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிடுவதுடன், மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு நடத்தி பஸ் ஸ்டாண்ட் திறப்புக்கு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு பேருந்து நிலையத்தின் உள்ளேயே வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக கடைகள் அமைத்து தர வேண்டும்.

Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur