ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் வேலைதேடும் நபரா நீங்கள்? - மிஸ்பண்ணாதீங்க... நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூரில் வேலைதேடும் நபரா நீங்கள்? - மிஸ்பண்ணாதீங்க... நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tiruppur Employment Camp | திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதும் இதில் பங்கேற்று பயனடையலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26ஆம் தேதி) நடைபெற இருப்பதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்  வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10.30 மணிக்கு துவங்குகிறது.

இந்த முகாமில் தனியாா் துறையில் வேலையளிப்பவர்கள் பங்கேற்று பயனாளிகளைத் தேர்வு செய்ய உள்ளனர். ஆகவே, வேலைதேடும் நபர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு

அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம்.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இந்த முகாமில், எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரையிலும், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தர்களும் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் பங்கேற்கும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து கொள்வதுடன், கூடுதல் கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின்

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தனியாா் துறைகளில் வேலையில் சேர்வதால், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்ரத்துத் செய்யப்படமாட்டாது. இந்தப் பணி முற்றிலும் இலவசமானதாகும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்புடா் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Employment camp, Job Fair, Local News, Tiruppur