ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் பல்வேறு பகுதிகள் நாளை (ஜூலை 22) மின்தடை.. உங்கள் பகுதி இருக்கா என பாருங்க..

திருப்பூரில் பல்வேறு பகுதிகள் நாளை (ஜூலை 22) மின்தடை.. உங்கள் பகுதி இருக்கா என பாருங்க..

திருப்பூரில்  மின் தடை அறிவிப்பு..

திருப்பூரில் மின் தடை அறிவிப்பு..

Tiruppur District | திருப்பூரில் பிரதான பகுதிகளில் ஜூலை 22-ல் மின் தடை அறிவிப்பு..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur | Tiruppur

திருப்பூரில் நாளை ( 22 ம் தேதி - வெள்ளிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கலெக்ட்ரேட் துணை மின் நிலையம், சந்தைப்பேட்டை துணை மின் நிலையம் , பொங்கலூர் துணை மின் நிலையம், குமரன் சாலை துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்:

திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையத்தில் செரீப் காலனி பீடரில் உயர் மின் அழுத்த பாதையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட குறிஞ்சி நகர், அரண்மனை புதூர், கே.எஸ்.சி.ஸ்கூல் ரோடு, அரிசி கடை வீதி, தாராபுரம் சாலை ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

குமரன் சாலை துணைை மின் நிலையம்:

இதுபோல் திருப்பூர் குமரன் சாலை துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆலாங்காடு மின் பாதையில் மின் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட வாலிபாளையம் மெயின் ரோடு, எச்.டி.எப்.சி. பேங்க் வீதி, மணிக்காரர் சந்து, வாலிபாளையம் சந்து, கண்ணன் டிப்பார்ட்மென்ட் வீதி, என்.எம்.அப்பார்ட்மென்ட், சேம்பர் ஹால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

கலெக்ட்ரேட் துணை மின் நிலையம்:

திருப்பூர் கலெக்டரேட் துணை மின்நிலையத்தில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகவதி நகர், ஜி.கே.எம்.பராசெஸ், எஸ்.பி. ப்ராசெஸ், ஆல்வின் ஏரியா, தண்டுக்காரன் தோட்டம், கருவேலன் காட்டு தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொங்கலூர் துணை மின் நிலையம்:

பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruppur, Tirupur