திருப்பூர் மாவட்டம் காங்கயம் மின்கோட்டத்துக்குட்பட்ட காங்கேயம், சிவன்மலை துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
காங்கேயம், சிவன்மலை துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.
ஆகையால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை காங்கேயம், சிவன்மலை துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கேயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.
உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.