ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் தடை

திருப்பூர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் தடை

மின் தடை

மின் தடை

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில்  மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை (நவம்பர் 18) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம்துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, கீழ்கண்ட பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மடத்துக்குளம், அதன்படி, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி,கணியூர், காரத்தொத்ழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

Must Read : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

இதேபோல, சீலநாயக்கன்பட்டி , கடத்தூர், ஜோத்தம்பட்டி , செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர், அ.க.புத்தூர், எஸ்.ஜி.புதூர், ரெட்டி பாளையம், போத்தநாயக்கனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur