ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

மின் தடை

மின் தடை

Tirupur : பல்லடம் அருகே கரடிவாவி  துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

    திருப்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 24) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    பல்லடம் அருகே கரடிவாவி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது.

    மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : காது அறுப்பட்ட நந்தியின் வரலாறு.. திருப்பூரில் உள்ள இந்த ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..?

    இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரித்துள்ளார்.

    மின் தடை ஏற்படும் இடங்கள்:

    கரடிவாவி, கரடிவாவிபுதூர், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி , அப்பநாயக்கன்பட்டி புதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி , கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதிகளில் மின் தடை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local News, Powercut, Tirupur