திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
மூலனூர், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடைபெறவுள்ளது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.
ஆகையால், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மூலனூர், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் துணை மின் நிலையங்களில் உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
மூலனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகப்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் அதைசார்ந்த பகுதிகள்.
கன்னிவாடி துணைமின்நிலையத்திற்குட்பட்ட மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் அதுசார்ந்த பகுதிகள்.
கொளத்துப்பாளையம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளயைம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.