Home /tiruppur /

போர்ட்டபிள் டாய்லெட்: பயோ டேங்க்... நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நகரும் கழிவறைப் பயன்பாடுகள்

போர்ட்டபிள் டாய்லெட்: பயோ டேங்க்... நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நகரும் கழிவறைப் பயன்பாடுகள்

பயோ

பயோ டேங்க்

திருப்பூரில் கண்காட்சியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் நகர்த்தும் வகையிலா மொபைல் டாய்லெட் மற்றும் பயோ டேங்க் காட்சிப்படுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூரில் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நிட்ஷோ டிரேடு எக்ஸ்போசிஷன் நிறுவனம் சார்பில் 20-வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர் காங்கேயம் ரோடு மணி மஹால் அருகே உள்ள டாப்லைட் சென்டரில் வெள்ளிகிழமை தொடங்கியது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் 450 அரங்குகளுடன் ஆயத்த ஆடை, பிரின்டிங் தொடர்பான மெஷின்கள் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உள்ள கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த வகையில் காய்கறிகளிலிருந்து இயற்கை முறையில் சாயம் தயாரிப்பு, இயற்கை முறை சாயத்திலிருந்து துணிகளுக்கு சாயம் இடுதல், மறுசுழற்சி செய்யும் ரசாயன கழிவுகள், பாறையில் இருந்து பொடி எடுத்து ஆடைகளுக்கு சாயம் பூசுதல், சுற்றுச்சூழலை காக்கும் விதமாக உள்ள பயோ டேங்க் மற்றும் போர்ட்டபிள் டாய்லெட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க இந்திய அரசாங்கம் தனிநபர் கழிப்பிடம், பொதுக்கழிப்பிடம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இருப்பினும் இடப்பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் ஆகிய காரணங்களால் கழிவறை அமைப்பது என்பது சிக்கலான காரியமாக உள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பூங்காக்கள், கடற்கரைகள், திருவிழாக்கள் போன்ற இடங்களில் அடிப்படைத் தேவையான கழிவறை என்பது இன்றளவும் சவாலான செயலாகவே உள்ளது.

அதற்கு தீர்வு காணும் வகையில் நிறைய நிறுவனங்களும் படித்து முடித்த இளைஞர்களும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டனர். அதில் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு போர்ட்டபிள் டாய்லெட் ஆகும்.

மொபைல் டாய்லெட்:

போர்ட்டபிள் அல்லது மொபைல் டாய்லெட் என்பது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும் வசதி கொண்டது. நம் வசதிக்கேற்ப வெவ்வேறு இடங்களில் மாற்றி வைக்கும் வசதி உடையது. போர்டபிள் டாய்லெட் அல்லது மொபைல் டாய்லெட் மொட்டை மாடிகள், வீட்டு தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களான மேடைப் பேச்சு நடைபெறும் இடங்கள், கோவில் திருவிழாக்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இவ்வகையான மொபைல் டாய்லெட் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவை பயன்படுத்துவதற்கும் சுத்தம் செய்வதற்கும் எளிமையான ஒன்றாக இருக்கும். ரெடிமேடாக செய்து வைக்கப்பட்டுள்ள டாய்லெட்டுகளில் தண்ணீர் குழாயை மட்டும் இணைத்தால் போதும். இவற்றின் கழிவுகள் பயோ டேங்க் என்ற செயற்கை கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிக்கப்படுகிறது.

பயோ செப்டிக் டேங்க்:

வீடுகள், பள்ளிகள், நிறுவனங்கள், அப்பார்ட்மென்ட்கள் என அனைத்து இடங்களிலும் பயோ டேங்குகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியாகவும், பராமரிப்பு ரீதியாகவும் எந்த கவலையும் இல்லை. செலவு இல்லை. துர்நாற்றம் வீசுவது, அடிக்கடி கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வது என்ற எந்த இடையூறும் இல்லாத ஒன்றாக இந்த பயோ டேங்க் உள்ளதே இதன் சிறப்பம்சம் ஆகும்.

பயோடேங்கின் பயன்பாடுகள்:

1. பயோ செப்டிக் டேங்க் அமைப்பதால் நிலத்தடி நீர் சுத்தம் ஆவதுடன் அடிக்கடி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதிலிருந்து விடுபடலாம்.

2. பயோ செப்டிக் டேங்கை பயன்படுத்தி கழிவு நீரை சுத்தமான நீராக மாற்றலாம்.

3. கழிவு நீரை மறுசுழற்சி செய்து தோட்டத்திற்கு பயன்படுத்தும் ஒரு சிறந்த கருவியாக பயோ டேங்க் உள்ளது.

4. மற்ற கழிவு நீர் தொட்டியுடன் ஒப்பிடுகையில் வெறும் மூன்றே நாட்களில் கழிவுகளை மக்க செய்து வருகிறது.

5.வாழ்நாள் முழுவதும் இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கவலை இல்லை. அதேபோல, பொருளாதார ரீதியாகவும் மிகவும் குறைவான செலவே இதற்கு ஆகின்றது.

6.மிகவும் முக்கியமானதாக மனித கழிவை மனிதனே அள்ளும் அவலநிலையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு நிரந்தர தீர்வாக இந்த பயோ செப்டிக் டேங்க் உள்ளது.

பயோ செப்டிக் டேங்க்கின் விலை மற்றும் அளவு அதன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பொருத்தே மாறுபடுகின்றது.

எடுத்துக்காட்டாக 4 அல்லது 6 நபர்கள் கொண்ட குடும்பம் என்றால் அவர்களுக்கு 10 பயனர் செப்டிக் டேங்க் சரியானதாக இருக்கும். [10 user bio Septic tanks] அதாவது 10 நபர்கள் வரை கழிவறையை உபயோகிக்கும் வீடுகளுக்கு / அலுவகங்களுக்கு அடிப்படை டேங்க் காண 10 பயனர் செப்டிக் டேங்க் பொருந்தும்.

10 நபர்களுக்கும் அதிகம் உள்ள இடங்களுக்கு 20 பயனர் செப்டிக் டேங்க் பொருந்தும். [20 user bio Septic tanks]. இதே போல் 40 பயனர் மற்றும் 100 பயனர் செப்டிக் டேங்க் என்ற அளவுகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. [40 user&100 User bio Septic tanks]

நிலத்தடி நீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு நிரந்தர தீர்வாக மொபைல் டாய்லெட் மற்றும் பயோ டேங்க் அமையும்.

மேலும் மொபைல் டாய்லெட் மற்றும் பயோ டேங்க் பற்றிய விவரங்களுக்கு.

தொடர்புக்கு...

ஹரிஹரன் - Tele : 0422 - 4380180
Mob : 93677 80901, 89255 19024.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி