திருப்பூர் மாவட்டத்தில் தொழில் மற்றும் கல்விக் கடன் வழங்க முகாம் நடக்கும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளதாவது: தமிழக சிறுபான்மை பொருளாதர மேம்பாட்டு கழகம் சார்பில், இந்த நிதியாண்டில், சிறுபான்மையினருக்காக கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்காக திருப்பூர் மாவட்டத்தில், இந்த நிதியாண்டில் 1.55 கோடி அளவுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கடன் திட்டங்களும் வழங்கப்படுகிறது.
இதில், கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் டாம்கோ விராசாட் (Virasat) கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.
புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000, நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000 இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்- திட்ட தொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் :
திருப்பூா் வடக்கு வட்டத்தில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் வருகிற 1 ஆம் தேதியும், அவிநாசி வட்டத்தில் ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 2ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதேபோல, பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் டிசம்பர் 5ஆம் தேதியும் முகாம்கள் நடைபெறும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தாராபுரம் வட்டத்தில் உள்ள தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை வட்டத்தில் உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் டிசம்பர் 6ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.
Must Read : இளையராஜாவுடன் இணைந்த தேனி கவிஞர்... வைரமுத்து அல்ல - இவர் யார் தெரியுமா?
இந்த முகாம் காலை 10-30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண் - 0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Educational Loan, Loan, Local News, Tiruppur