முகப்பு /திருப்பூர் /

விவசாய திட்ட பலன்களுக்கு இணையவழி பதிவு கட்டாயம் - திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

விவசாய திட்ட பலன்களுக்கு இணையவழி பதிவு கட்டாயம் - திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர்

திருப்பூர்

Tiruppur District | இணையவழியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கே அரசின் அனைத்து திட்டப்பலன்களும் கிடைக்கும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tiruppur, India

தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்ட பலன்களும் இணைய வழியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட  கலெக்டர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தோட்டக்கலைத்துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன.

தற்போதைய, 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:  திருநெல்வேலியில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி.. போலீசாருக்கு பரிசு!

தற்போது, விவசாயிகள் இச்சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்க இயலும் நிலை உள்ளதால் இதற்காக விவசாயிகள் http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பதிவு செய்யத்தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tiruppur