Home /tiruppur /

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மங்களூருவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில் திருப்பூர் வழியாக செல்லும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கேரளாவில் செப்டம்பரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் சில இடங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். ஓணம் பண்டிகையின்போது பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில், அவ்வப்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மங்களூரில் இருந்து திருப்பூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதுவரை 6 சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது.

    அவ்வகையில், செப்டம்பர் 11-ந் தேதி மங்களூருவில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, சொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று மறுநாள் மதியம் 1:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஆன்லைனினும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி