திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தாட்கே திட்டத்தின் சார்பில் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளதாவது, 'தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் 2022-23 ஆம் ஆண்டில் 50 ஆதிதிராவிடா், பழங்குடியினர் தொழில் முனைவோர் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதார் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யவும் மற்றும் அதிக பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதி திராவிடர் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2.25 லட்சம் மானிமும், பழங்குடியினர் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் கொடுக்கப்படும்.
இத்திட்டம் தொடா்பாக http://application.tahdco.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட மேலாளா், தாட்கோ, அறை எண்: 501,503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604, கைபேசி எண்: 94450-29552, 0421-2971112 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur