Home /tiruppur /

திருப்பூர் மக்கள் எளிய முறையில் வரி செலுத்த புதிய ஏற்பாடு

திருப்பூர் மக்கள் எளிய முறையில் வரி செலுத்த புதிய ஏற்பாடு

மாதிரி படம்

மாதிரி படம்

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் இன்று முதல் வரி வசூலிப்பு மையங்களில் செலுத்தலாம் என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை மறுசீரமைக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டது. இதனால் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட பயனீட்டு கட்டணம் உள்ளிட்டவை வரி வசூல் மையத்தில் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், வரி செலுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் இன்று முதல் அனைத்து வரி மற்றும் கட்டணங்களை பணமாகவோ, காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.

Also Read : திருப்பூர் மாவட்டத்தில் யூரியா, உரம் இருப்பு நிலவரம் - வேளாண்துறை தகவல்

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 4.0 மணி வரை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. எளிய முறையில் வரி மற்றும் கட்டணங்களை https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக கட்டணமின்றி பயன்படுத்தலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

4 மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் சேவைகளான சொத்துவரி விதித்தல், காலியிட வரி விதித்தல், பெயர் மாறுதல்கள் செய்தல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்தால் உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி