ஹோம் /திருப்பூர் /

திருப்பூர்வாசிகளே உங்க ஊரின் பல பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு..

திருப்பூர்வாசிகளே உங்க ஊரின் பல பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு..

திருப்பூர்

திருப்பூர்

Tiruppur District Power Shutdown | திருப்பூர்  மாவட்டம்  முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (27-ம் தேதி)  (செவ்வாய் கிழமை)   மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur | Tiruppur

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (27-ம் தேதி) (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகாரமாக நாளை மின் தடை என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும் படிக்க:  ரூ.1,60,000 மானியம் அறிவிப்பு- திருப்பூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க:  தென்னை மரங்களுக்கு இலவசமாக வரப்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் தடை ஏற்படுகிறது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள்: -

சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காளிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் செவந்தம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யாவு நகர் பகுதியில் மின்தடை ஏற்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur