ஹோம் /திருப்பூர் /

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்?- விவரங்களைத் தெரிந்துகொள்க

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்?- விவரங்களைத் தெரிந்துகொள்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பள்ளிப் படிப்பு உதவித் தொகை திட்டத்துக்கு செப்டம்பா் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு சிறுபான்மையினர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிகலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  கிருஸ்துவம், இஸ்லலாம், சீக்கியம், புத்தம், பார்சி, ஜெயின் ஆகிய மதத்தவர்களை மத்திய அரசு சிறுபான்மையினராக அறிவித்துள்ளது. மேலும், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் அரசு சார்பில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

  இதையொட்டி, இந்தாண்டு, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

  பெறுவதற்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில், பள்ளிப் படிப்பு உதவித் தொகை திட்டத்துக்கு செப்டம்பா் 30-ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெற அக்டோபா் 31ம் தேதி வரையிலும் ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

  பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரையில் படிப்பவா்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

  மேலும், விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்புர் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Tiruppur