ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை 20 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் - பொதுமக்கள் பயன்படுத்திக்கோங்க...

திருப்பூரில் நாளை 20 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் - பொதுமக்கள் பயன்படுத்திக்கோங்க...

லோக் அதாலத்

லோக் அதாலத்

Tiruppur District | திருப்பூரில் நாளை ( சனிக் கிழமை) 20 இடங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் வரும் நாளை ( நவம்பர் 12) 20 இடங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் துவங்கி வைக்கிறார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் சட்டப் பணிகள் ஆணைக்குழு ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் தெரிவித்துள்ளதாவது:-

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரி, லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூரில் நடத்தப்பட இருக்கிறது. வரும் 12ம் தேதி (நாளை) திருப்பூரில் 20 அமர்வுகளாக நடத்தப்படுகிறது.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

காலை 10 மணிக்கு நடக்கும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 11,072 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டுகிறோம் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Court, Local News, Tiruppur