ஹோம் /திருப்பூர் /

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி - திருப்பூர் கலெக்டர் தகவல்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி - திருப்பூர் கலெக்டர் தகவல்

கடன் உதவி

கடன் உதவி

Loan for Minorities | கைவினை கலைஞர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி பெறலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு (விராசத்) கடன் திட்டம் 1-ல், குடும்ப ஆண்டு வருமானம், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 20-த்துக்குள்ளும், கிராமப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். திட்டம் 2-ல் குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

கைவினை கலைஞர்களுக்கு திட்டம் 1-ல் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ல் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

Must Read :மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் அவர்கள் சார்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணிலும், dbcwotpr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Loan, Local News, Tiruppur