ஹோம் /திருப்பூர் /

திருப்பூர்வாசிகள் கவனத்திற்கு... கண்ணூர் - யஷ்வந்த்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்.. முழு விவரம்..

திருப்பூர்வாசிகள் கவனத்திற்கு... கண்ணூர் - யஷ்வந்த்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்.. முழு விவரம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruppur | திருப்பூர் மக்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாகவும், பயணிகளுக்கு சுபலமாகவும் சென்று வரவும் வகையில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மக்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாகவும், பயணிகள் சுபலமாக சென்று வரும் வகையில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யஷ்வந்த்பூர் - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள யஷ்வந்த்பூர் மற்றும் கேரள மாநிலம் கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தமிழகம், கேரளாவில் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக யஷ்வந்த்பூர் - கண்ணூர் இடையே (வ.எண்:06283) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க : கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

நாளை (அக். 7) காலை, 7:40 மணிக்கு யஸ்வந்த்பூரில் இருந்து புறப்படும் ரயில், இரவு, 8:30க்கு கண்ணூர் சென்றடையும். நாளை இரவு 11:00 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் ரயில் (06284) மறுநாள் (அக்.8) மதியம், 1:00 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது.

இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, 6, படுக்கை வசதி, 7, பொதுப்பிரிவு, 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்ததூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரணூர், திரூர், கோழிக்கோடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் விரும்புகிற பகுதிகளுக்கு செல்லாம் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur