முகப்பு /செய்தி /திருப்பூர் / திருப்பூரில் வடமாநில தம்பதியின் குழந்தை கடத்தல்.. சிக்கிய காதல் ஜோடி - வெளியான பகீர் தகவல்

திருப்பூரில் வடமாநில தம்பதியின் குழந்தை கடத்தல்.. சிக்கிய காதல் ஜோடி - வெளியான பகீர் தகவல்

திருப்பூரில் பச்சிளம் குழந்தையை கடத்திய காதல் ஜோடியிடம் போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் பச்சிளம் குழந்தையை கடத்திய காதல் ஜோடியிடம் போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் பச்சிளம் குழந்தையை கடத்திய காதல் ஜோடியிடம் போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் கடத்தபட்ட குழந்தை உயிருடன் 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.குழந்தை இல்லை என கூறி கடத்தியதாக காதல் ஜோடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் வடமாநிலத்தை சேர்ந்த தம்பதி அர்ஜூன் குமார் - கமலினி தம்பதியினர் மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவர்களுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல வந்திருந்த உமா என்கிற பெண் கமலினியின் ஆண் குழந்தையை திருடி சென்றார். இவர் குழந்தையை எடுத்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மல்லிகைபாடி - பரங்கியநத்தம் கிராமத்தை சேர்ந்த ராணி என்பவர் தன்னுடன் பனியன் கம்பனியில் பணியாற்றியதால் அவரிடம் தொடர்பு கொண்டு குழந்தை பிறந்துள்ளதாகவும் தான் குழந்தை எடுத்து வருவதாகவும் கூறி பேருந்து மூலம் பச்சிளம் குழந்தை எடுத்துகொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைக்க குழந்தை காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருப்பூர் காவல் ஆணையர் பிரவின் குமார் அபினவ் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி அருகே கடத்தபட்ட குழந்தை இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலிஸ் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உதவியுடன், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மல்லிகைபாடி பரங்கினத்தம் கிராமத்தில் பதுங்கி இருந்த உமா மற்றும் பச்சிளம் குழந்தையை மீட்டனர்.

இதையும் வாசிக்க: மருத்துவமனையில் புகுந்து ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண்.. 12 மணி நேரத்தில் கைது செய்த திருப்பூர் போலீசார்..

பிறகு உமா மற்றும் அவருக்கும் அடைக்களம் கொடுத்த ராணி ஆகியோரையும் கைது செய்து ,கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவில் பச்சிளம் குழந்தையை அனுமதித்தனர்.பிறகு திருப்பூர் மாவட்ட போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

top videos

    மேலும் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை திருப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.குழந்தையை கடத்திய உமா - விஜய் தம்பதியினர் கடந்த ஒருவருடமாக காதலித்து வந்த நிலையில் குழந்தை இல்லை என்பதால் குழந்தையை திருடியதாக போலீசார் முதற்கட்ட விசாரணை யில் உமா கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, திருப்பூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Baby kidnaped, Kidnapping Case