Home /tiruppur /

திருப்பூரில் தாய் - சேய் நலம் காக்க புதிய திட்டம் அறிமுகம்

திருப்பூரில் தாய் - சேய் நலம் காக்க புதிய திட்டம் அறிமுகம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

‘நலமான குழந்தைகள் வளமான தமிழகம்’ என்ற நோக்கிதல் ‘தாய் சேய் நலத்துக்கு ஆதாரமான முதல் 1,000 நாட்கள்’ என்ற விழிப்புணர்வு திட்டம் திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில்,'நலமான குழந்தைகள் வளமான தமிழகம் ' என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. கரு உருவான நாளில் இருந்து, 270 நாள் சிசு கர்ப்பத்தில் இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு, 180 நாட்கள் மிகவும் முக்கியமானவை. அடுத்ததாக 7வது மாதம் முதல் 2 வயது வரையுள்ள 550 நாட்களும் குழந்தை வளர்ச்சியில் மிகவும் முக்கியமான நாட்கள் ஆகும்.

தாயின் வயிற்றில் கரு உருவானதில் இருந்து, இரண்டு ஆண்டு வரை குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கும் வகையில், ‘தாய் - சேய் நலத்துக்கு ஆதாரமான முதல் 1000 நாட்கள்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெற கர்ப்பம் உறுதியானதும் பதிவு செய்ய வேண்டும் என்றும் முறையாக மருந்து மாத்திரை, ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தை பிறப்பு எடையானது 3 கிலோவுக்கு குறையாமல் இருக்கவேண்டும். குழந்தைக்கு 6 மாதம் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், 7ஆவது மாதத்தில் இருந்து துணை உணவு கொடுக்க வேண்டும். சரியான இடைவெளியில் தடுப்பூசி செலுத்த வேண்டுமென இந்த திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பம் தரித்த நாளில் இருந்து, இரண்டு வயது நிறையும் வரையிலான நாட்களில் தான் குழந்தையின் மூளையானது 80 சதவீதம் வளர்ச்சி அடையும் என்பதால், இந்த நாட்களில் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் அவசியம் என்பதையும் இந்த திட்டத்தில் முழு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி