Home /tiruppur /

ஏற்றுமதியில் முதல் இடத்தை நோக்கி திருப்பூர் - நிட்க்ஷோ கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பெருமிதம்..

ஏற்றுமதியில் முதல் இடத்தை நோக்கி திருப்பூர் - நிட்க்ஷோ கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பெருமிதம்..

திருப்பூர்

திருப்பூர்

Tiruppur Latest News : திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நிட்சோ டிரேட் கம்பெனி சார்பில் 450 அரங்குகளுடன் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பின்னலாடை நிறுவனங்களுக்கு பயன்படும் மெஷின்கள் மற்றும் புதுவிதமான ஆயத்த ஆடை தொடர்பான செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
திருப்பூரில் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நிட்ஷோ டிரேடு எக்ஸ்போசிஷன் நிறுவனம் சார்பில் 20-வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர் காங்கேயம் சாலை, மணி மஹால் அருகே உள்ள டாப்லைட் சென்டரில் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் குளிரூட்டப்பட்ட 6 ஹால்களில் 450 அரங்குகள் அமைக்கப்பட்டுருந்தன.

அமெரிக்கா, ஜப்பான், சீனா, இத்தாலி, போர்ச்சுகல், துருக்கி, தைவான் போன்ற பல நாடுகளில் இருந்து நவீன பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, பெங்களூரு, புதுடெல்லி, லூதியானா உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளும் கண்காட்சி அரங்குகளில் இடம் பெற்றது.  ஆயிரக்கணக்கான தொழில்துறையினர் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் இல்லை.

நிட்ஷோ கண்காட்சியில் பிரிண்டிங், தையல், எம்பிராய்டரி, பின்னல் என ஏராளமான அதிநவீன இயந்திரங்களும், வெளிநாட்டு, உள்நாட்டு மூலப்பொருட்களும் இடம் பெற்றன. இதில் திருப்பூர் மேகலா மெஷின்ஸ் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் சீனா தொழில்நுட்பத்தில் ஆர்ப்பிட்டோ எனும் யூனிட் புரொடக்சன் சிஸ்டம் என்ற ஹேங்கர் எந்திரம் இடம் பெற்றது. இதை பயன்படுத்துவதன் மூலமாக அதிக தொழிலாளர்கள் இல்லாமல் 30 சதவீத உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் ஆடைகளில் சேதம் இல்லாமல் பாதுகாப்பாக உற்பத்தி செய்வதற்கு இந்த இயந்திரம் பெரிதும் உதவியாக இருக்கும்.

சாதாரண தையல் எந்திரத்தில் கூட இந்த சிஸ்டத்தை பொருத்த முடியும். மேலும் இந்த கண்காட்சியில் இயற்கை முறையில் பயன்படுத்தும் பயோ டாய்லெட் போன்ற போர்ட்டபிள் டாய்லெட் , மற்றும் பாறை பொடியியல் இருந்து சாயம் தயாரிப்பது, இயற்கை காய்கறிகளில் இருந்து சாயம் தயாரிப்பது மற்றும் 60 வருட கால தையல் மிஷின்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிட்ஷோ கண்காட்சி குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தொடங்கி வைத்து கூறியதாவது:- நூல்விலை போன்ற பிரச்சினைகளை தாண்டி, தற்போது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பின்னலாடை தொழில் பயணிக்கிறது. அதற்கு இந்த கண்காட்சி பேருதவியாக இருப்பதுடன், திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு நிட்ஷோ கண்காட்சி பெரிய பங்களிப்பாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரின் வர்த்தகம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு கீழாகவே இருந்தது. இன்று ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடை வர்த்தகம் ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் 60 சதவீதத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது காஞ்சிபுரம் ஆகும். 2-வது சென்னை மற்றும் 3-வது இடத்தில் திருப்பூர் உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் திருப்பூர் ஏற்றுமதியில் காஞ்சிபுரத்தை முந்தி விடும். சீரான வளர்ச்சிப்பாதையில் செல்லும் திருப்பூரில் நிரந்தர கண்காட்சி வளாகம் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
Published by:Arun
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி