ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு வேளாண்துறையின் முக்கிய அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு வேளாண்துறையின் முக்கிய அறிவிப்பு

தென்னை

தென்னை

Tiruppur District | திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு மானிம் தொடர்பாக வேளாண்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்று வேளாண்மைத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உடுமலை வட்டாரத்தில் நீண்ட காலப் பயிரான தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி வேளாண்மை உழவர் நலத்துறை-தென்னை வளர்ச்சி வாரியம் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் தென்னையில் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி 2.5 ஏக்கருக்கு ஒரு எண் என்ற அளவில் முழுவிலையான ரூ.1,400 லிருந்து 50 சதவீத மானியத்தில் ரூ.700 க்கு வழங்கப்பட உள்ளது.

Must Read : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

மேலும், மெட்டாரைசியம் பூஞ்சாணம் 2.5 ஏக்கருக்கு 4 கிலோ வீதம் ரூ 540 முழு விலையில் 50 சதவீத மானியத்தில் ரூ.270-க்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Agriculture, Coconut Plant, Local News, Tiruppur