ஹோம் /திருப்பூர் /

பயிர் காப்பீடு செய்துவிட்டீர்களா? - திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பயிர் காப்பீடு செய்துவிட்டீர்களா? - திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருப்பூர்

திருப்பூர்

Tiruppur District | திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அது குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

2016ம் ஆண்டு முதல், மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டுக்கான காப்பீடு நிறுவனம் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘ராபி’ பருவத்துக்கான பயிர்காப்பீடை தொட்ங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெல், மக்காச்சோளம், பாசிப்பயறு, கொண்டை கடலை, நிலக்கடலை, சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  ‘ராபி’ பருவத்துக்கு பயிர்காப்பீடு செய்ய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்யலாம்.

இதையும் படிங்க : திருப்பூர்வாசிகள் கவனத்திற்கு... கண்ணூர் - யஷ்வந்த்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்.. முழு விவரம்..

பயிர்க்கடன் பெறாதவர்கள், அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகலுடன் சென்று காப்பீடு செய்யலாம். திருப்பூர் மாவட்ட விவசாயிகள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில், இது தொடர்பான விவரங்களை பெறலாம்.

ஒரு ஏக்கர் நெல்லுக்கு, 559.50 ரூபாய், பாசிப்பயறு -253.94 ரூபாய் செலுத்தி நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம். மக்காச்சோளம் - 486.75 ரூபாய், கொண்டை கடலை -269.25 ரூபாய், பருத்தி -693.60 ரூபாய் பிரிமியம் செலுத்தி நவம்பர் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.

சோளத்திற்கு -38.61 ரூபாய் செலுத்தி, டிசம்பர் 15ம் தேதக்குள் காப்பீடு செய்யலாம். அதேபோல், நிலக்கடலைக்கு - 470.25 ரூபாய் செலுத்தி டிசம்பர் 31ம் தேதிக்குள் காப்பீடு பதிவு செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எதிர்பாராத இழப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்கும், பண்ணை வருவாயை நிலை நிறுத்துவதற்கும் மேலும், நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றவும் அரசு பயிர்க்காப்பீடு திட்டம் அவசியமானதாகும். எனவே, திருப்பூர் விவசாயிகள் காலம் தாழ்த்தாமல் பயிர்காப்பீட்டை பதிவு செய்துகொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Farmers, Local News, Tiruppur