ஹோம் /திருப்பூர் /

பிரதமரின் பயிர் காப்பீட்டு.. இறுதிநாள் நெருங்குகிறது - திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவுரை

பிரதமரின் பயிர் காப்பீட்டு.. இறுதிநாள் நெருங்குகிறது - திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவுரை

காப்பீடு

காப்பீடு

Tiruppur Farmers | திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நெற்பயிர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் பிரதமரின் பயிர் காப்பீட்டு (Pradhan Mantri Fasal Bima Yojana) திட்டத்தில், காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் விவசாயிகள் நெற்பயிர்களை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வருகிற 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் நெல் சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்து ரசீதை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Farmers, Insurance, Local News, Tiruppur