மத்திய, மாநில அரசுகள் எஸ்சி மற்றும் எஸ்டியினர்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளையும், பல்வேறு பொருளாதார முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது.
மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் பல்வேறு ஆதி திராவிடர்களுக்கும் பழங்குடியினர்களுக்கும் பல்வேறு வகையான பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டுள்ளது.
தாட்கோ திட்டத்தில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ( தாட்கோ) பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. தொழில் கடன் மேம்பாட்டு திட்டம் (EDP), சுய வேலைவாய்ப்பு திட்டம் (SEPY) திட்டங்களின் கீழ் சுய வேலைவாய்ப்புக்கான தாட்கோ மானியத்துடன் வங்கி கடன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : விவசாய திட்ட பலன்களுக்கு இணையவழி பதிவு கட்டாயம் - திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு
விண்ணப்பங்கள் வங்கிகளுடன் நிலுவையில் உள்ள 199.55 லட்சம் உபகாரம் கொண்டதாக உள்ளன. மானியத் தொகை வழங்குவதற்கு உடனடியாக கிடைக்கும். வங்கிகளுக்கு பொருளாதார மானியங்கள் கடன்பட்டிருக்கும்போது உடனடியாக தாட்கோ-வால் வெளியிடப்படும்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மானியமும், பழங்குடியின இனத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.90 ஆயிரம் மானியமும் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை TANCEM நிறுவனத்துக்கு செலுத்தப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சிமெண்ட் விற்பனை செய்வதற்கான வழிமுறைகள், வியாபார உத்திகள், கொள்முதல் செய்வோரை அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளரை 0421 2971112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur