மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மானியம் வழங்கப்படுகிறது. இதையொட்டி, பெண்கள் முதல் எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பை ஊக்குவித்திட மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 250 ச.மீ. முதல் 1,000 ச.மீ.வரையிலான பண்ணைக்குட்டையில் மீன்குஞ்சு இருப்பு செய்து மீன் தீவனம் உள்ளீட்ட செலவினம் மேற்கொள்ள ஒரு அலகுக்கு 36 ஆயிரம் ரூபாய் மற்றும் செலவினத்திற்கு 50 சதவீத மானியத்தொகை ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
ரூ.3 லட்சத்தில் புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் 1.20 லட்ச ரூபாயும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் 1.80 லட்ச ரூபாயும், ரூ.8 லட்சத்தில் நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிக பட்சம் 3.20 லட்ச ரூபாயும் ஆயிரமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் 4.80 லட்ச ரூபாயும் ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் ரூ.20 லட்சத்தில் உயிர்மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வழங்கவும், ரூ.20 லட்சத்தில் குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வழங்கிட பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.8 லட்சமும், ரூ.10 லட்சத்தில் அலங்கார மீன்களின் மீன்விற்பனையக கட்டுமானத்திற்கு அதிகபட்சமாக பொது பிரிவிற்கு ரூ.4 லட்சமும், 1 ஹெக்டேர் பரப்பளவில் புதியமீன்குஞ்சு, வளர்ப்பு அலகு அமைக்க பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் 2,80 லட்ச ரூபாயும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் 4.20 லட்ச ரூபாயும் வழங்கப்படும்.
இந்த மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன்வளர்ப்பு செய்து பயன்பெறலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர் (தொலைபேசி எண்.89037 46476) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur