Home /tiruppur /

கடலூர் டூ திருப்பூர்.. விநாயகர் சிலைகளில் இந்த வருஷம் என்ன ஸ்பெஷல்?

கடலூர் டூ திருப்பூர்.. விநாயகர் சிலைகளில் இந்த வருஷம் என்ன ஸ்பெஷல்?

கொடுவாய்

கொடுவாய் - விநாயகர் சிலைகள்

Tirupur Koduvai : திருப்பூர் கொடுவாய் பகுதியில் 12 அடி உயரம் வரை பல வண்ணங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் கடலூர் பண்ருட்டியில் இருந்து வந்துள்ள சிலை தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur | Tiruppur
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் கொடுவாய் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. திருப்பூர் ,தாராபுரம் காங்கயம் கோவை, உடுமலைப்பேட்டை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைக்க விரும்புவோர் முன்பதிவு செய்ததன் அடிப்படையில் இங்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அரை அடி உயரம் முதல் 12 அடி வரையுள்ள விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதுமையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டிராகன்களை வைத்திருப்பது போன்றும், மாடுகள் வைத்திருப்பது போன்றும், சிங்கங்கள், யானைகள் அருகில் இருப்பது போன்றும் விதவிதமான விநாயகர் சிலைகள் மஞ்சள், சிவப்பு ,பச்சை, கருப்பு என்று பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. லிங்கத்துடன் விநாயகர் இருப்பது போன்ற வடிவமைப்பு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

வெள்ளை மண், காகித கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு பல வண்ணங்களில் வடிவம் பெறுகின்றன. மேலும், கிழங்கு மாவை பதப்படுத்தி திரித்து அச்சில் எடுத்து வாட்டி அழகிய விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டி உருவாக்கப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சிலை தயாரிப்பு பணிகள் முடங்கி இருந்ததனால் இந்த வருடம் சிலை வைத்து வழிபடுபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் ஆர்டர்கள் பெருகி உள்ளது என்கின்றனர் சிலை தயாரிப்பாளர்கள்.

இதையும் படிங்க:  வறுமையிலும் தளராத முயற்சி.. சாகச முகாமிற்கு தேர்வாகி அசத்திய சிக்கண்ணா  கல்லூரி மாணவர்கள்..

இது குறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் கூறியதாவது, “கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் நாங்கள் காலம் காலமாக குடும்பம் முழுவதும் சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஒவ்வொரு வருடமும் விஜயதசமிக்கு சிலை தயாரிப்பு பணிகளை தொடங்கி அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தி வரை சிலை தயாரிப்பு பணிகளை மேற்கொள்வோம் . மழைக்காலங்களில் இரண்டு மாதங்கள் மட்டும் எங்கள் சிலை தயாரிப்பு பணிகள் முடங்கிவிடும். கடலூர் மாவட்டத்தில் சிலைகளை செய்து அவற்றை சிறு சிறு பாகங்களாக செய்து டெம்போக்கள் மூலம் இங்கு திருப்பூருக்கு எடுத்து வந்து ஒவ்வொரு பகுதிகளையும் ஒட்டி பிறகு மோல்டிங் செய்து அதற்கு வண்ணமிட்டு விநாயகர் சிலைகளாக உருவாக்குவோம்.

இதையும் படிங்க:  சாலையோர வியாபாரிகளின் ஏக்கத்தை போக்குமா புதிய பேருந்து நிலையம்?

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. வெள்ளை மண், காகித கூழ், பயன்படாத காகிதங்கள் ஆகியவற்றைக் கொண்டே நாங்கள் சிலைகளை தயாரிக்கின்றோம். இயற்கை முறையில் இந்த சிலைகளை தயாரிப்பதினால் இவை எடை குறைவாகவே உள்ளன. சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பான சிலைகளாகவே தயாரிக்கின்றோம். இந்த சிலைகள் காகித கூழினால் தயாரிக்கப்படுவதால் நீரில் கரைத்த உடன் உடனே கரையும் தன்மை கொண்டவை என்று அவர் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே உள்ள நிலையில் சிலை தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன 70 முதல் 80 சதவீதம் வரையிலான பணிகள் முடிந்திருக்கும் நிலையில் உருவ வடிவம் முடிந்த விநாயகர் சிலைகளுக்கு ஓவிய வடிவம் கொடுக்கும் வகையில் வண்ணம் தீட்டும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. காகிதத்தை கடவுளாக மாற்றி வடிவம் கொடுக்கும் இந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காலமாக விநாயகர் சதுர்த்தி நிகழ்வு இருப்பதால் அவர்கள் சிலை தயாரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Ganesh Chaturti, Local News, Tiruppur

அடுத்த செய்தி