தமிழ்நாடு சீருடை பணியாளர் பணியிடங்களில் காலியாக உள்ள இடத்தை நிரம்புவதற்கு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட இருக்கின்றது.
இதில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்தோர்களுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் மையம் சார்பில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், 3,552 பணிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு,
www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10:30 மணிக்கு துவங்கும். மேலும், விபரங்களுக்கு, 0421-2999152 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தேர்வினை எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.