ஹோம் /Tiruppur /

Tirupur | அரசு மருத்துவமனையில் மூன்று வேளைகளும் நோயாளிகளுக்கு சத்துணவு.!

Tirupur | அரசு மருத்துவமனையில் மூன்று வேளைகளும் நோயாளிகளுக்கு சத்துணவு.!

அரசு மருத்துவமனையில் இலவச உணவு

அரசு மருத்துவமனையில் இலவச உணவு

Tirupur | திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மூன்று நேரமும் சத்தான இலவச உணவு வழங்கப்படுகின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பூர் தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களையும் மற்றும் அதை சார்ந்து இயங்கும் சிறு குறு தொழில்களையும் அல்லது அன்றாடம் வேலை செய்பவர்களாக மட்டுமே உள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக மூன்று நேரமும் சத்தான உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கும் ,அவர்களின் உடன் இருப்பவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இலவச உணவு

அதன்படி ,அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமான உணவுகள் மூன்று நேரமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் புரதச்சத்து நிறைந்த உணவுகள் மூன்று நேரமும் வழங்கப்படுகின்றது.

திருப்பூர் அரசு மருத்துவமனை

இது குறித்து சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கூறியதாவது, ‘அன்றாடம் வேலை செய்யும் மக்கள் எங்களுக்கு இலவச மருத்துவம் என்பதே பெரும் வரவாக உள்ளது. அப்படி இருக்கும் சூழலில் உணவே மருந்து என்பதைப் போல் மருத்துவமனையில் சத்தான உணவுகள் வழங்கப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தினமும் காலையில் பால், இட்லி, முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றது. அதேபோல், மதிய உணவிற்காக சாப்பாடு, சாம்பார், தயிர் ஏதாவது ஒரு காய்கறி வகை பொரியல், கீரை என்று சத்தான உணவாக வாழங்கப்படுகின்றது. மேலும், மாலை நேரங்களில் பால் மற்றும் சுண்டல் என சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுகின்றது.

இங்கு சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்படும் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் பால் வழங்கப்படுகின்றது. மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துள்ளதால் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சூழல் இங்கு உள்ளது என்று பெருமிதத்துடன் கூறினர்.

இன்று ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே சிகிச்சைக்காக செல்லும் அரசு மருத்துவமனைகள்; பின்னாளில், நாட்டில் அனைவருக்கும் இலவசம் மருத்துவத்தை தரும் மருத்துவமனையாக தரம் உயர இதுவே ஒரு முதற்படியாக அமைகின்றது இவ்வாறு அவர்கள் கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tirupur