ஹோம் /திருப்பூர் /

மத்திய அரசு பணி தேர்வுகளுக்கு  திருப்பூரில் இலவச பயிற்சி

மத்திய அரசு பணி தேர்வுகளுக்கு  திருப்பூரில் இலவச பயிற்சி

திருப்பூர்

திருப்பூர்

Tirupur Free Coaching For Central Government Job Exams | மத்திய அரசின் வேலை  பெற விரும்புவோர்களுக்கு திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பணியாளர்  தேர்வாணையத்தால் ( எஸ்எஸ்சி) அறிவிக்கப்பட்டுள்ளது எஸ்எ1;சி , ( சிஎஸ்எல்) தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

மத்திய அரசின் வேலை பெற விரும்புவோர்களுக்கு திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பணியாளர் தேர்வாணையத்தால் ( எஸ்எஸ்சி) அறிவிக்கப்பட்டுள்ளது எஸ்எ1;சி , ( சிஎஸ்எல்) தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி இன்று (28ம் தேதி ) துவங்கியது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதையும் படிங்க ; திருப்பூர் மக்கள் எளிய முறையில் வரி செலுத்த புதிய ஏற்பாடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டிஎன்பிஎஸ்சி., டிஎன்யுஎஸ்ஆர்பி., எஸ்எஸ்சி., டி.ஆர்.பி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது Assistant Audit Officer, Assistant Account Officer, Assistant Section officer, Inspector of income tax, Junior Statistical Officer போன்ற பதவிகளில் 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 17.9.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.10.2022. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (28.9.2022) மாலை 2.30 மணிக்கு தொடங்கியது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தங்கள் பெயரை https://forms.gle/BHUGLvaxfkkCMqKt8 என்ற link-இன் மூலம் google form -ல் பதிவு செய்வதன் மூலமோ (அல்லது) 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur