முகப்பு /செய்தி /திருப்பூர் / பானிபூரியில் உப்பில்லை: பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்... திருப்பூரில் பரபரப்பு

பானிபூரியில் உப்பில்லை: பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்... திருப்பூரில் பரபரப்பு

பெட்ரோல் குண்டு வீசிச்சு சம்பவம்

பெட்ரோல் குண்டு வீசிச்சு சம்பவம்

பானிபூரியில் உப்பில்லை என்று கடை மீது இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் பானிபூரியில் உப்பில்லை என பேக்கரி கடைக்குள் பெட்ரோலிய குண்டு வீசிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு வயது 30. இவர் பெருந்தொழுவு அருகே கோவில்பாளையம் பிரிவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரின் கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு உப்பு அதிகமாகவும் மற்றொருவருக்கு உப்பே இல்லாமலும  விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்த இளைஞர்கள் இரண்டு பேரும் இதுகுறித்து கடையில் இருந்தவர்களிடம் தகராறு செய்து பணத்தை வீசிவிட்டு பாக்கி பணத்தை வாங்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சற்று நேரம் கழித்து மேலும் இரண்டு நண்பர்களுடன் அதே கடைக்கு சென்று மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி  வீசிவிட்டு தப்பி சென்றனர்.

இதையும் வாசிக்கமனதின் குரல் 100-வது பதிப்பைக் கேட்பதில் தகராறு... நடுரோட்டில் தாறுமாறாக சண்டையிட்ட பாஜகவினர்

இவர்கள் பாட்டிலை தீ வைத்து பற்ற வைக்காமல் வீசியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார்(23), அஸ்வின் (23), சக்தி கணேஷ்(22), பூவலிங்கம் (22) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

top videos
    First published: