ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி அணை

அமராவதி அணை

Tiruppur District | திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை திறக்கப்பட இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில், வெள்ள அபாய எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் அதிகப்படியான நீர் நிலைகள் இருப்பதால், அமராவதி அணை கட்டப்பட்டது. மேலும், தமிழகம், கேரளா வனப்பகுதியில், இருந்து வரும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் அணைக்கு நீர் ஆதரமாக இருக்கிறது.

இந்த அணையால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனதுக்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது.

Must Rread: கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

அணையின் நீர் இருப்பும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது 87 அடியை கடந்தது. இதனால், இந்த பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட இருப்பதால்,  பொதுப்பணித்துறையினர் 2-ம் முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அணை அதன் முழு கொள்ளளவை எட்டியவுடன் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறப்பதற்கு உண்டான சூழல் நிலவுவதால் கரையோர கிராமங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.34 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,134 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

விரைவில் இந்த அணை திறக்கப்பட இருக்கிறது.

Published by:Suresh V
First published:

Tags: Flood alert, Local News, Tiruppur