Home /tiruppur /

 திருப்பூரில் 16-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்...

 திருப்பூரில் 16-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் வருவாய் கோட்டாசியர் அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udumalaipettai, India
    திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உடுமலை மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், உடுமலை மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உடுமலை மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16ந் தேதி நடக்கிறது. காலை 10 மணி அளவில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில், உடுமலை மடத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிக்கலாம். மேலும், இதில், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக கழகம், கால்நடை, மின்சாரம், தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் மனுவாகவும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு வரும் முன் கணிணியில் தங்களது பெயர் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். மேலும், மனுக்களை கொடுக்கும் முன் ஒப்புதல் பெற்று, கணிணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி