முகப்பு /திருப்பூர் /

திருப்பூரில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூரில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் வரும் 26-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடக்கிறது.

இந்த கூட்டமானது திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமையில் நடக்கிறது. திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி வட்டங்களை சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிக்கலாம்.

மேலும், இதுகுறித்து விவசாயிகள் மனுவாகவும் சமர்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tiruppur