Home /tiruppur /

வெள்ளக்கோவில் வாரச்சந்தைக்கு 30 டன் முருங்கை வருகை- கிலோ ரூ.20-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச்சந்தைக்கு 30 டன் முருங்கை வருகை- கிலோ ரூ.20-க்கு விற்பனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தைக்கு 30 டன் முருங்கையை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டுவந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வாரச் சந்தைக்கு நேற்று 30 டன் முருங்கைகாய் வரத்து இருந்தது. மேலும், முருங்கைகாய்கள் கிலோ ரூ.20க்கு விற்பனையானது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தையில் ஞாயிறுதோறும் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    நேற்று 30 டன் முருங்கைகாய்களை 80 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளக்கோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஒரு கிலோ செடி முருங்கை 10 ரூபாய் முதல் 14 ரூபாய் வரைக்கும், மர முருங்கை 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரைக்கும், கரும்பு முருங்கை 17 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.  தற்போது சீசன் என்பதாலும் வரும் வாரங்களிலும் முருங்கை வரத்து அதிகமாக இருக்கும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி