Home /tiruppur /

முன்னாள் ராணுவவீரர்கள் திருப்பூரில் தொழில் பயிற்சி பெறலாம்! - வழிமுறைகள் அறிவிப்பு

முன்னாள் ராணுவவீரர்கள் திருப்பூரில் தொழில் பயிற்சி பெறலாம்! - வழிமுறைகள் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தொழில் பயிற்சி பெறுவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு வேலைவாய்ப்பு பெற ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம், தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, செல்போன் பழுது நீக்கம், கார் மெக்கானிக், ஏ.சி மற்றும் பிரிட்ஜ் பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், பேட்டரி பராமரிப்பு, பேட்டரி சார்ஜ் மையங்கள் அமைத்து பராமரித்தல்.

    தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கம்ப்யூட்டர் தட்டச்சு மற்றும் ஹார்டுவேர் பழுதுபார்த்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தைச்சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைசார்ந்தோர், இப்பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.

    விருப்பமுள்ளோர், 0421 2971127 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம், அல்லது exweltup@tn.gov.in என்கிற முகவரிக்கு இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி