ஹோம் /திருப்பூர் /

காங்கேயத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் - விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

காங்கேயத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் - விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் நடைபெறும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

  மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை காங்கேயத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கற்று மக்கள், தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன் கிழமையன்று நடைபெறுவது வழக்கம்.

  இதன்படி இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

  இந்த கூட்டத்துக்கு மேற்பாா்வை பொறியாளா் தலைமை தாங்கி நடத்துகின்றார். தங்களின் குறைகளைத் தெரிவித்து, மின் நுகா்வோா் நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று காங்கேயம் கோட்ட பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Tiruppur