Home /tiruppur /

திருப்பூரில் குண்டும் குழியுமாக இருக்கும் முக்கிய சாலைகள்- வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூரில் குண்டும் குழியுமாக இருக்கும் முக்கிய சாலைகள்- வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் சாலைகள்

திருப்பூர் சாலைகள்

திருப்பூரில் முக்கிய சாலைகள் குண்டு குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது என்று வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மார்க்கெட் வளாகம், நொய்யல் கரை சீரமைப்பு, குடிநீர் திட்ட பணிகள் மேம்பாடு, நடைபாதைகள் அமைப்பு, பாதாள சாக்கடை பணிகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல கோடி ரூபாய் செலவில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருப்பூர் மாநகர் முழுவதும் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டும் பள்ளங்கள், குழிகள் தோண்டப்பட்டும் சரியான பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன.

திருப்பூர் சாலைகள்


இந்நிலையில், திருப்பூர் நொய்யல் கரையான ஸ்ரீ சக்தி தியேட்டர் ரோடு, வளர்மதி, ஈஸ்வரன் கோவில் ரோடு போன்ற சாலைகள் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நகரின் முக்கிய சாலை என்பதால் இச்சாலையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

திருப்பூர் சாலைகள்


மேலும், மழை நேரங்களில் நொய்யலாற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளினாலும், சாலைகளில் சாக்கடை கழிவு நீர் கலப்பதினாலும் நகரின் பிரதான சாலையானது துர்நாற்றம் வீசியபடியும் நடப்பதற்கு கூட ஏதுவான சூழல் இல்லாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சாலையில் நடைபெறும் இம்மாதிரியான விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்தை சரி செய்யவும், ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tirupur

அடுத்த செய்தி