Home /tiruppur /

திருப்பூர் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க தடை- சுற்றுலாப் பயணிகள் சோகம்

திருப்பூர் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க தடை- சுற்றுலாப் பயணிகள் சோகம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழை காரணமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சியில் பெய்து வரும் மழையால், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணைக்கு நீர் வருகிறது.

    அமராவதி அணையால், திருப்பூர், கரூர் மாவட்டத்தில், 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சில நாட்களாக வனப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மழை அதிகரித்துள்ளதால், அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நேற்றும் 3-வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையொட்டி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 3- வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதித்துள்ளது. மேலும், வனத்துறை சார்பில் பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி