Home /tiruppur /

Tiruppur | வெள்ளகோவிலில் ரூ.67லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

Tiruppur | வெள்ளகோவிலில் ரூ.67லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வெள்ளக்கோவிலில் நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் 67 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில், நேற்றைக்கு முந்தைய நாள் நடந்த ஏலத்தில், மொத்தம் 67 லட்ச ரூபாய்க்கு கொப்பரை(காய்ந்த தேங்காய்) ஏலம் நடந்துள்ளது என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாரந்தோறும் செவ்வாயன்று வெள்ளக்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது.

    விற்பனைக் கூடத்துக்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் கொண்டு வந்திருந்தனர். நேற்று 156 விவசாயிகள் கலந்து கொண்டு 89,093 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளக்கோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 16 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக 84.35-ரூபாய்க்கும், குறைந்தபட்சம் ரூ.69.05-க்கும் கொள்முதல் செய்தனர். 66,871- ரூபாய்க்கு வணிகம் நடைபெற்றது. நேற்று மொத்தம் ரூ.67,66,871-க்கு வணிகம் நடைபெற்றது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி