ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் 9 போலீசார் அதிரடி இடமாற்றம் ஏன் தெரியுமா? 

திருப்பூரில் 9 போலீசார் அதிரடி இடமாற்றம் ஏன் தெரியுமா? 

திருப்பூர்

திருப்பூர்

Do You Know Why 9 Police Officers Have Moved In Tirupur? | திருப்பூர்  போலீஸ் கமிஷனர் பிரபாகரன்  நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த 9 போலீசாரை   அதிடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். தற்போது இது பொது மக்களிடம் பரவலாக பேசப்படுகிறது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த 9 போலீசாரை அதிடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். தற்போது இது பொதுமக்களிடம் பரவலாக பேசப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலையம் வாரியாக நுண்ணறிவு பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டவிரோத செயல்கள், ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

இதையும் படிங்க ; திருப்பூர் விவசாயிகள் பிரதமரின் கிசான் நிதி பெற உடனே இதை பன்னுங்க..!

இப்பிரிவு முழுமையாக, போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்படும்.நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீசாரை இடமாற்றம் செய்ய சமீபத்தில் பட்டியல் தயார் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

இச்சூழலில், ஐ.எஸ்., பிரிவில், அலுவலக, ஸ்டேஷன் பணியை மேற்கொண்டு வந்த நிவாஸ் சக்கரவர்த்தி, ரகுபதி, கணேஷ்குமார், பிரபு, பிரகாஷ், குப்புசாமி, ஜான் பிரவின், சத்யமூர்த்தி, சார்லி என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தெற்கு, திருமுருகன்பூண்டி, வீரபாண்டி, நல்லூர்,

அனுப்பர்பாளையம், வடக்கு ஆகிய ஸ்டேஷன்களை சேர்ந்த பூபதி, கார்த்திகேயன், ஜெயசந்திரன், பாலசுப்ரமணியன், குமார், நாகேந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை ஐ.எஸ்., பிரிவுக்கு மாற்றி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து தெற்கு, திருமுருகன்பூண்டி, வீரபாண்டி, நல்லூர், அனுப்பர்பாளையம், வடக்கு ஆகிய ஸ்டேஷன்களை சேர்ந்த பூபதி, கார்த்திகேயன், ஜெயசந்திரன், பாலசுப்ரமணியன், குமார், நாகேந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை ஐ.எஸ்., பிரிவுக்கு மாற்றி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur