ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Tiruppur Power Cut areas | திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கோட்ட மங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கோட்ட மங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 8) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோட்ட மங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி , சுங்காரமுடக்கு, குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மேற்கு மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur